திண்டுக்கல் அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி பெருவிழா காப்பு கட்டுதலுடன் பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டு விழா துவங்கியது.

திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரியின் முதல் நாள் அபிராமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் .மேலும் திருக்கோவிலில் அனைத்து சுவாமிகளின் சிலைகள் அனைவரையும் கவரும் வகையில் திருக்கல்யாண வைபோக சிலைகள், வளைகாப்பு விழா, அத்திவரதர்,ராம அவதாரம், 108 மணமக்களின் சிலைகள் கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் என பாடலை நினைவூட்டும் வகையில் சாப்பாட்டு ராமனின் சிலை அடங்கிய பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டு, நாள்தோறும் அம்மனுக்குப் பல்வேறு சிறப்பு அலங்காரங்களும், வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. மேலும் இன்று கடையநல்லூர் டாக்டர் சங்கர நாராயணன் இசை குழுவினரின் வீணை கச்சேரி நடைபெற்றது.

விழா நாட்களின் இறுதி நாளான விஜயதசமி அன்று அம்பு போடும் நிகழ்வுடன் இந்த நவராத்திரி விழா நிறைவுபெறும். இன்றைய முதல் நாள் மண்டகப்படி முன்னாள் அறங்காவலர் குழு அரவிந்தா செல்போன் வீரக்குமார் குடும்பத்தார் சார்பாக நடைபெற்றது.



வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.