தேனி மாவட்டம் கம்பத்தில் ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

​தேனி மாவட்டம் கம்பம் தெற்கு வட்டம் ஸ்ரீ மந்தை அம்மன் கோவிலின் புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு, மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டது. ​கம்பம் நகரில் இருந்து கம்பம் மெட்டு மாநில நெடுஞ்சாலையில் எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

​பந்தய எல்லையை நோக்கி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றபோது, போட்டியிட்ட மாடுகளையும், வண்டியை ஓட்டியவர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் நின்றிருந்த ஏராளமான பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
​இப்போட்டியில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, பெரிய மாடு எனப் பல்வேறு பிரிவுகளில் 200-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
​வெற்றி பெற்ற மாடுகளுக்கும், வண்டியை ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன. இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
​கம்பம் காவல் நிலையக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைப் பிரமலைக்கள்ளர் சமுதாய அமைப்பினர் செய்திருந்தனர்.

Related

“ஒரே அமர்வில் 55 வயது நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை!”