திண்டுக்கல்லில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மையப் பகுதியில் அமைந்துள்ள போடிநாயக்கன்பட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை அன்று முதல் கால யாக பூஜை யுடன் துவங்கியது.தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க திருமுறை பாராயணம் மற்றும் மகா கணபதி வழிபாடுடன் நான்காம் கால பூஜை மகா பூர்ணாகுதி யுடன் நிறைவேறியது .

இதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து திருக்குடங்கள் புறப்பாடு மங்கள வாத்தியங்கள் இசைக்க வேதாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வானிலை கருடர் வட்டமிட ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் பரிபார தெய்வங்களுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேக மானது வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் கோவில் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

Related

“பெருநகர் அங்காளம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா ”