அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித்தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அஇஅதிமுக 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து சேலம் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாஜலம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி, வெற்றிவேல், உஷாராணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் கலையரசன், சேலம் புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சித்தன் மற்றும் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.