சேலம் புறநகர் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார். பேட்டியில் அவர் கூறும் போது, தமிழக அரசுக்கு ஏற்கனவே அதிக கடன் இருக்கும் பொழுது இவ்வளவு விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதற்கு என்ன காரணம் ஏற்கனவே கடந்த அரசு ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய் கொள்முதல் செய்யப்பட்டதில் அதிக ஊழல் நடந்ததாக கூறி ரத்து செய்த போது இப்பொழுது ஏன் இவ்வளவு விலைக்கு வாங்கிறீர்கள் அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைபிடித்து இருந்தால் இவ்வளவு விமர்சனம் வந்திருக்காது எனவே இவர்கள் செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிலே இவர்கள் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்துள்ளனர்.

செயற்கையாக மின்வெட்டை உருவாக்கி தற்பொழுது ஒரு யூனிட் 35 ரூபாய்க்கு வாங்குகின்றனர். திட்டமிட்டு நான்கு மாத காலமாக மின்சார கொள்முதல் செய்யாமல் கடுமையான மின்வெட்டை ஏற்படுத்தி மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தி மக்கள் எப்படியாவது மின்சாரம் கிடைத்தால் போதும் என்ற சூழலை ஏற்படுத்தி தற்பொழுது அதை வைத்து  35 ரூபாய் விலை கொடுத்து வாங்குவது கண்டிக்கத்தக்கது. இது வெற்றி மெகா ஊழல் என்று கூறலாம் என்றார்

ஆந்திராவில் அக்டோபர் மாதம் 15 முதல் 20 ரூபாய் வரை ஒரு யூனிட் மின்சாரம் ஒரு முதல் செய்தனர்.  எனவே இதில் மிகப் பெரிய சந்தேகம் உள்ளது பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர் அடுத்து விலைவாசி உயர்வு ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் ஏட்டியுள்ளது பருப்பு விலை உயர்வு எண்ணை விளைவு உயர்வு  புளி விலை உயர்வு என அனைத்து உணவு பொருட்களும் விலை உயர்ந்து விட்டது காய்கறி விலையும் உயர்ந்து விட்டது நடுத்தர மக்கள் ஏழை மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் விலையை குறைக்க அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் உணவுத்துறை அமைச்சர் வேண்டும் என்றே திட்டமிட்டு பரப்புவதாக கூறுகிறார் இது நிர்வாக திறமையற்ற அரசாங்கம் என்பதற்கு இதுவே உதாரணம் என்றார். பணபலம் அதிகார பலம் என இரண்டையும் வைத்து தான் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியை  கல்லாப்பெட்டி கூட்டணி என்று வர்ணித்தார்கள் ஆனால் அந்த கல்லாப்பெட்டி கூட்டணியில் வெற்றி பெற்றவர்களை எல்லாம் விசிக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆகியோரின் தயவால் தான் தற்போது அரசாங்கமே அமைந்துள்ளது.

தீயசக்தி திமுக என்று குறிப்பிட்ட அந்த கட்சி தலைமையில் போட்டியிட்டு  வெற்றி பெற்றவர்கள் தான் தான் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்து  இன்று கட்சி ஆட்சியில் உள்ளது. விஜய் முதலமைச்சர் ஆவதற்கு காரணமே கல்லாப்பெட்டி கூட்டணி என்று அவர் குறிப்பிட்ட அந்த சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு தான் முதலமைச்சராகி உள்ளார் என்றார். 

தேர்தலுக்கு முன்பாக ஒன்று கூறுவது அதன் பிறகு தற்போது அந்தர் பல்டி அடித்து  பேசுகின்றனர். தேர்தல் நேரத்தில் விஜய் பேசிய காட்சிகளை காண்பித்து எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார் 

அமைச்சர் ஆதார் அர்ஜுனா அதிமுகவை இருந்து அதிகளவில் கிளை ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வருவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ஏன் அந்த கட்சியில் கிளை செயலாளர்களே இல்லையா என்று கேள்வி எழுப்பி இதோடு அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டி அசைக்க முடியாது என்றும் ஒரு சிலர் கட்சிக்கு எதிரான நடவடிக்கை ஈடுபட்டால் அது அதிமுகவை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் தெரிவித்தார்.

 இடைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தது குறித்து கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி அவர் தனது கட்சியின் வரலாறு குறித்து சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் காட்டமாக தெரிவித்தார். 

பேட்டியின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related

“ஒரே அமர்வில் 55 வயது நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை!”