கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு கோவையில் ஒரு டன் எடையிலான கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக லால்குடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டார்.
கோவையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஒரு டன் எடையிலான கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது.கோவை மேட்டுப்பாளையம் சாலையில், சாய்பாபா கோவில் அமைந்துள்ள ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் முந்திரி, பாதாம், பிஸ்தா, ஆரஞ்சுத் தோல், கருப்பு திராட்சை, அத்திப்பழம், இலவங்கப்பட்டை, கிராம்பு உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களுடன் தேன், பானங்கள், பொன்னிறப்பாகு மற்றும் வெண்ணிலா சாரம் சேர்க்கப்பட்டு ஒரு டன் எடையிலான கேக் கலவை தயாரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஹோட்டல் ஊழியர்கள், சமையல் கலைஞர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமையல் கலைஞர்களுக்கான உடை மற்றும் தலைப்பாகை அணிந்து உற்சாகமாகப் பங்கேற்று, கேக் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களைக் கலந்தனர். தயாரிக்கப்பட்ட கலவை கிறிஸ்துமஸ் வரை காற்று புகாத பைகளில் பாதுகாத்து வைக்கப்பட்டு, பின்னர் கேக் தயாரிக்கப் பயன்படுத்தப்பட உள்ளது.
எம்.இன் .ஹோட்டலின் தலைமைச் சமையல் கலைஞர் ராஜா நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக லால்குடி சட்டமன்ற உறுப்பினரும், மார்ட்டின் குழும நிறுவனங்களின் இயக்குநருமான டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டார்.
இதுகுறித்து ஹோட்டலின் பொது மேலாளர் ஆர். சுசின் கூறுகையில், உலகெங்கும் பாரம்பரியமாக நடைபெறும் கிறிஸ்துமஸ் கேக் கலவை திருவிழாவை கோவையில் நடத்துவதில் பெருமை அடைவதாகவும், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சமையல் கலைஞர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.