சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே திருவள்ளூர் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் வயல்வெளியில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமியின் மனைவி சவுரியம்மாள் (47), அழகனின் மனைவி பெரிய கருப்பி (65) ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென மழை பெய்ததால், மழையிலிருந்து தப்பிப்பதற்காக அருகிலிருந்த மரத்தடியில் இருவரும் ஒதுங்கி நின்றதாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த இளையான்குடி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண் விவசாயிகள் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related

“ஒரே அமர்வில் 55 வயது நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை!”