சேலம் சுகவனேஸ்வரர் கோவிலின் உபக்கோவிலான ராஜகணபதி கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும் ராஜகணபதி கோவிலின் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதால் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி பாலா ஆலயம் செய்யப்பட்டு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றது.
ஜூன் 16 ஆம் தேதி முதன்முதலாக ராஜ கணபதி கோவிலில் 15 அடி உயரத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது தொடர்ந்து 24 ஆம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தனர் கடந்த 28ஆம் தேதி முதல் யாக பூஜை தொடங்கப்பட்டு நேற்று இரவு வரை மூன்று கால ஹோமம் நடைபெற்றது அதனை தொடர்ந்து இன்று ராஜகணபதி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு திருமுறை பாராயணம் பாவனப்பிஷேகம் வெள்ளை சாத்துப்படி நான்கு கால யாக பூஜை மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க கலசத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு தலைமை குருக்கள் தீர்த்த கலசத்தை தலையில் சுமந்தபடி யாகசாலையில் இருந்து ஊர்வலமாக ராஜ கணபதி கோவிலுக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ராஜகணபதி விமானம் முகப்பு விமானத்திற்கு தீர்த்த கலசத்தில் இருந்து தீர்த்தத்தை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடிமரம் மூஷிக வாகனன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்னர் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது ஏராளமான கருடன் வானத்தில் கோவிலின் கலசம் பகுதியில் வட்டமிட்டது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து மூலவர் ராஜகணபதிக்கு தீர்த்த கலசத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களை கொண்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது பின்னர் தலைமை குருக்கள் விஸ்வநாதன் தலைமையில் குருக்கள் வேதங்கள் முழங்க சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்ற பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கும்பாபிஷேக தினத்தில் ராஜகணபதியைக் காண அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டது கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை ஆறு மணிக்கு திருக்கல்யாண வைபவம் இரவு 8 மணிக்கு ஆயிரம் இசை கலைஞர்கள் மேளதாளம் முழங்க பாரம்பரிய நாட்டிய நடனங்கள் நடைபெற்ற பின்னர் ராஜகணபதி பெருமாள் புஷ்ப சதாபரணத்தில் திருவீதி உலா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாநகர போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சாதாரண உடைகளும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.