காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டம் பெருநகர் கிராமத்தில், அமைந்துள்ள ஸ்ரீ-அங்காளம்மன்
ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழாவானது இன்று வெகுவிமரிசையாக
நடைபெற்றது.
உத்தரமேரூர் வட்டம், பெருநகர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ-அங்காளம்மன் ஆலயத்தின் புணரமைப்பு பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், மஹா கும்பாபிஷேகத்தையொட்டி,
நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஷ்வரபூஜை, சங்கல்பம்,கோபூஜை, தனபூஜை, லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை நிர்மானம், பூர்ணாஹுதி, இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது.

நேற்றைய தினம் உலக நன்மைக்காக யாக வேள்வி பூஜைகள், விசேஷ சந்தி, அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தனம் சாத்துதல், விசேஷ திரவிய ஹோமங்களுடன், மூன்றாம் கால யாகசாலை பூஜைகளுடன், இன்று காலை நான்காம் கால சங்கல்பம்- சிறப்பு பூஜைகள் நிறைவடைந்து , சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிட
கோபுர விமான கலசத்திற்க்கும், பரிவார மூர்த்திகளுக்கும்,புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், பெருநகர் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து அருட் பிரசாதங்களை பெற்றுச் சென்றனர்.
ஸ்ரீ-அங்காளம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை பெருநகர்-பர்வதராஜ குலத்தினர்- மற்றும் கிராமப் பொது மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.