தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே மியாகான்பள்ளி, ஹமீதியா நகர் செய்யது அப்துல் கரீம் ஒலியுல்லா தர்ஹாவில்  உத்தம நபியின் உதய தின விழா மற்றும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது. 

செய்யது அப்துல் கரீம் வலி தர்ஹா திடலில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி பூமான் நபியின் புனித மெளலித் ஷரிப் குர்ஆன் மல்லிஸ் நடைபெற்றது. இரவு 7.00 மணியளவில் மாணவ மாணவிகள் பங்கேற்ற பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

ஜமாத் தலைவர் M.K.M.செய்யது அஹமது கபீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு M.K.M.முகம்மது நாகிப் M.ஹக்கீம்,M.O.முகைதீன் இப்ராஹிம் & சன்ஸ், M.K.M.முகம்மது நாசர், K.M.M.M.அஹமது மீரான், M.K.M.செய்யது முகம்மது புகாரி, M.முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி அரபி பேராசிரியர் மௌலவி அல்ஹாபிழ் MNM. முஹம்மது இல்யாஸ் உஸ்மானி சிறப்புரையாற்றினார். 

பரிசுகளை திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை ஹாஜி. Dr.M.K.M. முகம்மது ஷாஃபி வத்தலக்குண்டு மு.ஹக்கீம் ஆகியோர் வழங்கினர். பள்ளி செயலாளர் செய்யது மீரான் நன்ற கூறினார். ஏற்பாடுகளை மிய்யாகான் பள்ளி இமாம் மௌலவி K.செய்யது அப்துல் கரிம் அல்தாஃபி செய்திருந்தார்.

Related

“பெருநகர் அங்காளம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா ”