திருநெல்வேலி மாவட்ட அனைத்து மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் இன்று போதை இல்லா தமிழகம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படியும் மாநில TNCDA சங்க வலியுறுத்தலின் படியும், திருநெல்வேலி மாவட்ட  மருந்து  கட்டுப்பாட்டு துறை  மற்றும் மாவட்ட அனைத்து மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் போதையில்லா தமிழகம் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

 திருநெல்வேலி மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர்  எஸ். எஸ். முகமது கமால் தலைமையில், முதுநிலை மருந்து ஆய்வாளர்  ஸ்ரீ ரேகா முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நெல்லை மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் அரி பார்மா சண்முகவேல், மாவட்டச் செயலாளர் கணபதி பார்மா ராஜகோபால், மாவட்ட பொருளாளர் ஷிபா மெடிக்கல் முகமது பீர் கசாலி, திருநெல்வேலி மாவட்ட  மருந்து வணிக மூத்த உறுப்பினர்  ராஜமன்னார்,  எஸ் எம் இஸ்மாயில், மொத்த மருந்து  சங்க மாநில , மாவட்ட நிர்வாகிகள் குமரன் சண்முக நாதன், கிருஷ்ணா & கோ  சரவணன், வள்ளியம்மை  கதிரேசன், முத்து விநாயகா  சபா நாயகம்,மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்,அமைப்புச் செயலாளர், மொத்த மருந்து வணிக பிரிவு தலைவர், சில்லறை  மருந்து வணிக பிரிவு தலைவர், துணை  தலைவர்கள், இணைச் செயலாளர்கள்,  மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் , TNCDA மாநில  செயற்குழு  உறுப்பினர்கள் ,அனைத்து சங்க நிர்வாகிகள், நெல்லை மாவட்ட தாலுகா நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்பில் பங்கேற்றனர்.
 

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”