கோம்பை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த

அருள்மிகு ஸ்ரீ திருமலைராயப் பெருமாள் என்ற சுயம்பு ரங்கநாதர் ஆலயத்தில் புரட்டாசித் திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பையில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ திருமலைராயப் பெருமாள் என்ற சுயம்பு ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

​ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதச் சனிக்கிழமைகளில் புரட்டாசித் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

​அதன்படி, இந்த ஆண்டின் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று, ஆலயத்தில் சுயம்பு வடிவில் எழுந்தருளியுள்ள ரங்கநாதப் பெருமாளை தரிசனம் செய்ய அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

​தமிழகம் மட்டுமன்றி கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், நீண்ட வரிசையில் காத்திருந்து தாம் கொண்டு வந்த துளசி மாலைகளைச் சாத்தி, தீர்த்தப் பிரசாதங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

​பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, கோம்பை காவல் நிலையத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கோம்பை நகரப் பகுதியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை அடிவாரத்தில் திருக்கோவில் அமைந்திருப்பதால், பக்தர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

Related

“விமர்சையாக நடைபெற்ற கிருஷ்ணகிரி காலபைரவர் கோவில் 816 ம் ஆண்டு பாலாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு”