கோளுர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ நயினார் சுவாமிகள் திருக்கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், கோளுர் கிராம பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அருள்மிகு ஸ்ரீ நயினார் சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புனரமைக்கப்பட்ட இந்த திருக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக விழாவையொட்டி கடந்த 22 ம் தேதி யாகசாலை அமைத்து யாக பூஜைகள், கணபதி ஹோமம், அனுக்கை பூஜை, நவக்கிரக ஹோமம், கோபூஜை, லட்சுமி குபேர பூஜை,தனதான்ய பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதலாம் கால யாக பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜை, மங்கல இசை, சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது பக்தர்கள் மனம் உருகி முன்னோர்களை வழிபட்டனர் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது .
வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.