கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதல்வர் மரு. க. சத்யபாமா, தலைமையிலும், மரு. சந்திரசேகரன் மருத்துவ கண்காணிப்பாளர், மரு. மாரிமுத்து (பொது மருத்துவம்) ஆகியோர் முன்னிலையிலும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
உறுதிமொழியில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்-யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமை திறனும்- பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்! மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன். என்னும் உறுதி மொழியை முதல்வர் அவர்கள் வாசிக்க அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் அனைவரும் பின் தொடர்ந்து வாசித்து சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு. செல்வராஜ்,உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் மரு ரோமுள் தயான் ராஜா, மரு. தினேஷ், நிர்வாக அலுவலர்கள் எஸ்.கே சரவணன், ஜி.சி.சக்திவேல்* மற்றும் பேராசிரியர்கள் இணை பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் அமைச்சுப் பணியாளர்கள் செவிலியர்கள் கிரிஸ்டல் மேலாளர் (ம) பணியாளர்கள் ஆகியோர் அனைவரும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.