இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் நபிகள் நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவதூறாக சித்தரிக்கும் வகையில் Facebook-ல் புகைப்படம் வெளியிட்டதாகக் கூறப்படும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் வண்ணாரப்பேட்டை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், ராமச்சந்திர மூர்த்தி மூர்த்தி என்ற பெயரில் செயல்படும் Facebook கணக்கில், நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் புகைப்படம் வெளியிடப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் அறிவுறுத்தலின் பேரில், திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜே.எம். பாட்ஷா தலைமையில், மாவட்ட செயலாளர் துராபுதீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்சர் பாஷா, பழனிபாபா மாணவர் அப்பாஸ், செயல்வீரர் அப்பாஸ், இஸ்மாயில் உள்ளிட்டோர் வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையர் பாஸ்கரன் மற்றும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்.
சம்பந்தப்பட்ட Facebook பதிவை ஆய்வு செய்து, அதில் சட்டவிரோதமான உள்ளடக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என பேட்டி திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜே.எம். பாட்ஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.