சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  ஷரண்யா அறி  தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன்  ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி  தெரிவித்ததாவது,

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி இயல்பு நிலையினை தொடர்ந்து செயல்படுத்திட மாதந்தோறும் சட்டம். ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு தேவையான இடங்களில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள் மற்றும் பேனர் செய்தல், நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மயானப் பாதையினை மறைத்து ஆக்கிரமிப்பு செய்தல், கோவில் இடங்களில் ஆக்கிரமிப்பு ஏற்படுத்தி பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல், சமூக நல்லிணக்கத்தினை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் தரப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல், தேவையான இடங்களில் பாதுகாப்பு கருதி உயர்கோபுர மின்விளக்குகள் ஏற்படுத்துதல், பேருந்து நிறுத்தம் தொடர்பாக எழும் கருத்து வேறுபாடுகள், இறைவழிபாட்டு தளங்களில் உருவாகும் பிரச்சனைகளுக்கு இருதரப்பினருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எவ்வித பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும். இடையூறுமின்றி பொதுமக்கள் தங்களின் இயல்பு நிலையினை மேற்கொள்ள தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்களின் பாதுகாப்பான சாலை போக்குவரத்தினை உறுதி செய்திடவும், நகரின் முக்கிய வீதிகளில் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி நிறுத்துவதற்கும், சரியான நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தி பொதுமக்களை ஏற்றி செல்லவேண்டும்.

சாலைகளில் வேகத்தடைகள், வாகனத் தடுப்புகள் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு எளிதில் தெரியும் வகையில் ஒளிரும் பட்டைகள் அமைத்திட வேண்டும். வாகன விபத்தினை தடுத்திடும் வகையில் ஒளிரும் ஒட்டு வில்லைகளை முக்கிய இடங்களில் அமைத்திடவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்தினை சீர்படுத்திட துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர்முகமது இர்பான், உதவி ஆணையர் (கலால்) சோமசுந்தர சீனிவாசன், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related

“சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘சமரசம் 3.0’ விழிப்புணர்வு பேரணி!”