ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டி சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடிகராக இருக்கும் போது வந்து பார்த்த தமிழக முதல்வர் விஜய் தற்போது கொலை செய்த காவல்துறையினருக்கு ஆதரவாக இருப்பதில் என்ன நியாயம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடைபெற்று விசாரணை அறிக்கையில் இந்த சம்பவத்திற்கு காரணமான வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் காவலர்கள் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தற்போதைய தமிழக வெற்றிக்கழக அரசு வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் கே.பி. ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றம் சாட்டிய வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாக குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறுகையில் இந்த சம்பவத்தில் 13-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் ஆனால் கடந்த அதிமுக ஆட்சி காலம் திமுக ஆட்சி காலம் தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சி என எந்த ஆட்சி வந்தாலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மருத்து வருகின்றனர் எனவே அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் கொலை குற்றத்துக்கு சமமான ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின்பு இந்தியாவில் இது போன்ற சம்பவம் நடைபெற்றது கிடையாது எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். 

துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது தற்போது தமிழக முதல்வராக உள்ள நடிகர் விஜய் நேரடியாக வந்து இங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார் ஆனால் இன்று தமிழக வெற்றிக்கழக அரசு அவர் தமிழ் தலைமையில் அமைந்த பண்பு இந்த சம்பவத்தில் தொடர்புடைய வருவாய்த்துறையினர் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் அன்றைக்கு வந்து ஆறுதல் கூறிவிட்டு இன்று கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா  என்ன நியாயம் இருக்கிறது என்பதுதான் எங்கள் கேள்வி எனவே அவருடைய நடவடிக்கை பொருத்தமற்றது என தெரிவித்தார் 

இடதுசாரி கட்சிகள் தனியாக நிற்கிறோம் இப்பொழுது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை த வெ க கூட்டணியிலும் இல்லை திமுக கூட்டணியிலும் இல்லை இயற்கையாக அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கவே முடியாது எனவே இந்த தேர்தலை தனியாக சந்திப்பது என்று நாங்கள் முடிவு எடுத்து இருக்கிறோம்.

சென்னையில் இருக்கக்கூடிய கம்பெனிக்கு லண்டனில் போய் ஏன் ஒப்பந்தம் போட வேண்டும் என்பது நியாயமான கேள்வி அந்தக் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்றார்.


 

Related

“சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘சமரசம் 3.0’ விழிப்புணர்வு பேரணி!”