திண்டுக்கல்: திண்டுக்கல் வெக்காளியம்மன் கோவிலில் ஆடி 18 ஆடிப் பெருக்கை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் ராணி மங்கம்மாள் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோயிலில் 33 ஆம் ஆண்டு ஆடி 18 ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இருக்கன்குடி மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில், பெண்கள், ஆண்கள், குழந்தைகளை சுமந்த படியும், சிறுவர் சிறுமியர் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓம் சக்தி ஓம் சக்தி என கோஷம் முழங்க பூக்குழியில் இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினார். திண்டுக்கல் மாநகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை இராணி மங்கம்மாள் காலனி ஆட்டோ நண்பர்கள் செய்திருந்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.