திருவள்ளூர்: பொன்னேரி நகர பெரும்பேடு பாதயாத்திரை குழுவினர் சார்பில் பெரும்பேடு முத்துக்குமாரசாமி ஆலயத்திற்கு 14 ஆம் ஆண்டு பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வருடம் தோறும் பொன்னேரி நகர பெரும்பேடு பாதையாத்திரை குழு சார்பில் பெரும்பேடு ஸ்ரீ முத்துக்குமாரசாமி ஆலயத்திற்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருவது வழக்கம் அதன்படி 14வது ஆண்டாக நேற்று இக்குழுவை சேர்ந்த ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பெரும்பேடு கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்து பால்குடம் ஏந்தி ஊர்வலமாக பெரும்பேடு முத்துக்குமாரசாமி ஆலயத்திற்கு வந்து முருகருக்கு அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர் இதில் பலர் காவடி எடுத்து வந்திருந்தனர் முடிவில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

Related

“வடபழனி உள்ளிட்ட 757 திருக்கோயில்களுக்கான அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அரசு அறிவுப்பு”