சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 221 வது நினைவு நாளையொட்டி அரசு சார்பில் கிண்டியில் அமைந்துள்ள சிலைக்கு  அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ராஜ்மோகன், குமார், ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், சிவன்மலைக்கும் சென்னிமலைக்கும் நடுவே ஒரு சின்னமலை இருக்கிறான் என்று நினைவு படுத்திய மாவீரன். அவரது நினைவை போற்றுகிறோம் என்றார். தமிழக வெற்றி கழகம் இரவு பகல் பாராது இந்த பட்ஜெட் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிறப்பான நிதிநிலை அறிக்கை தயாராகி வருகிறது. பல இடங்களில் விரும்பத்தகாத கோஷங்களை நீட் தேர்வு போராட்டம் நடத்திய மாணவர்கள் எழுப்பினார்கள். அந்த மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ததற்கு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் தானும் இருக்கிறேன் என்று நிரூபித்திருக்கிறார். 

முதல் மூன்று மாதங்களில் இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் பெரிய முதலீடுகளை எதுவும் கொண்டு வரவில்லை.ஆனால் அமைச்சர் கீர்த்தனா மூன்று மாதங்களில் மிக பெரிய முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறார். திட்டமிட்டு அமைச்சர் கீர்த்தனாவுக்கு எதிராக பொய்  பிரச்சாரம் செய்து வருகிறார்கள் எனத் தெரிவித்தார். 

 

Related

“இருபாலர் தங்கும் விடுதிக்கு தடை விதிக்க வேண்டும் - ஐடி விடுதி உரிமையாளர் நல சங்க தலைவர் சீத்தாராமன் வலியுறுத்தல்!”