கோவில்பட்டி அருகே இருசக்கர வாகனம் சாலையோர கால்வாய் பள்ளத்தில் கவிழ்ந்து ஆசிரியர் பலி -மனைவி படுகாயம்; நாலாட்டின்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் கே.ஆர். நகரைச் சேர்ந்தவர் காந்திராஜ் (56). இவர் கோவில்பட்டியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி (56), ரயில்வே காலனியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இருவரும் ஞாயிற்றுக்கிழமை நாலாட்டின்புதூர் பிள்ளையார் கோவிலுக்கு சென்று விட்டு,  இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நாலாட்டின்புதூர்–கோவில்பட்டி சர்வீஸ் சாலையில்  சென்றபோது வாகனம் திடீரென நிலைதடுமாறி சாலையோர கால்வாய் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காந்திராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேஸ்வரி பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாலாட்டின்புதூர் போலீசார், காந்திராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related

“கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் சாலை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்!”