திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உப கோயில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் ஆடல் வள்ளல் நடராஜப் பெருமானின் இரத்தின சபைகளில் ஐம்பெரும் சபைகளில் முதல் சபை ஆகும்.
1200 வருடம் பழமையான இந்த திருக்கோயில் 2026-ஜூன் 25ஆம் தேதி திருக்கோயில் வளாகத்தில் 100 கால் மண்டபத்தில் திருக்கோயிலால் பராமரிக்கப்படும் 35 பசுகளுக்கு தேவையான வைக்கோல் இருப்பு வைத்திருந்த இந்த மண்டபத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு பெரும் தீ விபத்தாக மாறி பல மணி நேரம் போராடி தீயை அணைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஊழியர்களின் அஜாக்கிரதியான நடவடிக்கைக்கு பின்னர் இந்நிகழ்வில் திருக்கோயிலில் பணியில் இருந்த இரண்டு கோயில் ஊழியர்களை மட்டும் கோயில் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருந்தனர்.

ஆனால் அதன் பிறகு பழமையான இந்த திருக்கோயிலில் பழமையான இந்த மண்டபம் பராமரிப்பு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் முன் வரவில்லை. மேலும் திருவள்ளூர் மாவட்ட கோவில்கள் துறை அதிகாரிகள் நேரில் வந்து மண்டபம் குறித்து அதன் தன்மை குறித்து ஆய்வு செய்யவில்லை. இதன் காரணமாக ஒரு பழமையான திருக்கோயிலில் தற்பொழுது தீ விபத்து ஏற்பட்ட அந்த 100 கால் மண்டபத்தில் புதன்கிழமை அதிகாலை மேற்கூரை இடிந்து விழுந்தது. ஆயிரத்து நூறு வருடம் பழமையான ஒரு மண்டபம் ஒரு புராதான கோயிலின் மண்டபம் இடிந்து விழுந்த சம்பவம் மேற்கூரை இடிந்து முழுவதுமாக சேதம் அடைந்த சம்பவம் இந்த திருக்கோயிலில் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மண்டபம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பக்தர்களுக்கு கோயில் ஊழியர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக தமிழக அரசு இந்த திருக்கோயிலின் தொன்மையை பாதுகாக்க ஆய்வுகள் செய்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு திருக்கோயிலை திருக்கோயில் கட்டடங்களை தொன்மைகளை பாதுகாக்க வேண்டும் என்று இந்த திருக்கோவிலின் பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.