சென்னை: இரு பாலர் தங்கும் விடுதியால் சமூக சீரழிவு ஏற்படுகிறது. இதற்கு உரிய சட்ட திட்டங்களை அமல்படுத்த வேண்டும் அல்லது இருபாலர் விடுதிக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நல சங்க தலைவர் சீத்தாராமன் வலியுறுத்தி உள்ளார்.
இருபாலர் தங்கும் விடுதிக்கு தடை விதிக்க வேண்டும். வீடுகளுக்கு வழங்கும் கட்டணம் போல விடுதிகளுக்கும் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர் நலச் சங்கத்தினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சொத்து வரியை மாற்ற வேண்டும் குடிநீர் கட்டணத்தை சீர்படுத்த வேண்டும். மின்சார கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். இரு பாலர் விடுதியை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர் நல சங்க தலைவர் சீத்தாராமன், மாதம்தோறும் 800 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை கமர்சியல் டேக்ஸ் வழங்கிக் கொண்டிருக்கிறோம் அதிலிருந்து விலக்கு கொடுத்து இல்லங்களுக்கான மின் கட்டணமாக மாற்றி தர வேண்டும் என்றார். அரசு மின்சார கட்டணத்தை குறைத்தால் நாங்களும் விடுதி கட்டணத்தை குறைக்க தயாராக இருக்கிறோம்.
இருபாலர் தங்கும் விடுதிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். விடுதியை தடை செய்ய வேண்டும் என்று பலமுறை அரசிடம் முறையிட்டுள்ளோம் ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கென தனிச் சட்டங்கள் இயற்றப்படவில்லை. இயற்ற வேண்டும் இந்த விடுதிகளில் போதை வஸ்துகளை பயன்படுத்துகின்றனர். அதனால் அதனை தடைசெய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.