தேனி,கம்பம்:  தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள ஸ்ரீ சிவ கணேசன் திருக்கோவிலில் மிக விமர்சையாக நடைபெற்ற நூதன அஷ்டபந்தன  மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பல மாதங்களாக சிற்பிகளால் கோவில் பீடம், மற்றும் கோவில் கோபுர கலசங்களுடன் 5.5 அடி உயரம் கொண்ட விநாயகர் திருமேனி உருவச் சிலை அமைக்கப்பட்டு ஸ்ரீ சிவகணேசன் திருக்கோவில் கட்டுமானப்பணிகள் நிறைவடந்ததை தொடர்ந்து இத்திருக்கோவிலில்  இன்று மிக விமர்சையாக நூதன அஷ்டபந்தன   மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில் இரண்டு கால யாக பூஜைகளை நடத்தி  கோ மாத பூஜை நடத்தப்பட்டு கடம் புறப்பாட்டுடன்  வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி பட்டாச்சார்யர்களால் குடமுழுக்கு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சிவ கணேசருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளித்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்கள். இந்த விழாவில் கம்பம் நகர்ப்பகுதி மற்றும் கூடலூர், சின்னமனூர் உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானத்தினை பிரசாதமாக வழங்கினார்கள். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு நிர்வாகிகள்
ஏராளமானோர் செய்திருந்தனர் .

Related

“பெரும்பேடு முத்துக்குமாரசாமி ஆலய 14 ஆம் ஆண்டு பால்குடம் நேர்த்திக்கடன்!”