திருநெல்வேலி, ஆக.02- 

தமிழக மின்வாரியத் துறை அமைச்சர் பொய் சொல்வதில் கின்னஸ் சாதனை படைக்கிறார். பஞ்ச் டயலாக்கல் பஞ்சராகி இருக்கும் தமிழகத்தில் மாய பிம்பங்களை கட்டமைக்க நினைக்கிறார்கள். நடைமுறை எதார்த்தத்தை தமிழக அரசு புரிந்து கொள்ளும் வரை தமிழகத்தில் கஷ்டம், அவலம், கண்ணீர் போன்றவை தொடர்கதையாகத் தான் இருக்கும் என முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நெல்லை வண்ணாரப்பேட்டை ஐயப்பன் மஹாலில் நடைபெற்றது இதில் தமிழக வருவாய்த்துறை முன்னாள் அமைச்சரும் அதிமுக அம்மா பேரவை செயலாளருமான ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

 தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலிலும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் விசுவாசத்தின் அடையாளமாக யார் இருக்கிறார்களோ அவர்களை வெற்றி வேட்பாளராக அதிமுக பொதுச்செயலாளர் அறிவிப்பார். சட்டத்துறை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மின்வாரியத்தில் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நாடு முழுவதும் மின்வெட்டு இருப்பதாக தெரிவிக்கிறோம். ஆனால் அதனை ஏற்க மறுக்கிறார். 200 யூனிட் மின்சாரம் என அறிவிக்கப்பட்டது அது இன்னும் முழுமை பெறவில்லை. கடந்த ஜூன் ஜூலை மாதத்தை ஒப்பிட்டால் இந்த ஆண்டு 200 சதவீதத்திற்கு மேல் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. ஆதாரப்பூர்வமாக அதனை காட்டினாலும் அதனை ஏற்க மறுக்கிறார்கள். 

அமைச்சர் நிர்மல் குமார் பொய் சொல்வதில் கின்னஸ் சாதனை படைக்கிறார். இரண்டு லட்சத்தி 22 ஆயிரம் பேர் வேளாண் மின் இணைப்பு கேட்டு மனு செய்துள்ளனர். அது நிலுவையில் உள்ளது. தக்கல் முறையில் மின் இணைப்பு கேட்டு ஒன்பதாயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது வெள்ளை அறிக்கைகளும் காட்டப்படவில்லை. கடந்த மூன்று மாதத்தில் ஒருவருக்கு கூட புதிய மின் இணைப்பு வழங்கவில்லை. ஆனால் 22 ஆயிரம் கோடி கடனாக தமிழக அரசு பெற்றுள்ளது. தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் மாற்றம் என சொல்வது தலைமைச் செயலக மாற்றம் மட்டும்தான் என்பது ஒரே சாதனையாக உள்ளது. இவர்களது பேச்சு மக்கள் மத்தியில் எடுபடாது.

 இவர்கள் ரியலை பேசவில்லை ரீலை தான் பேசுகிறார்கள். இவர்கள் மக்கள் லைப் பற்றி பேசவில்லை. லைக் பெறுவதை பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். அமைச்சர்களின் நடவடிக்கை குறித்து பொதுமக்கள் சிரிப்பதா, அழுவதா என தெரியாத நிலையில் உள்ளனர். அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எஸ்டாட் போலீஸ் அனைவருமே பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளனர்.

 ஆனால் அமைச்சர்கள் ரீல் போடுவதற்காக இருசக்கர வாகனத்தில் செல்கிறார்கள். காவிரி விவகாரத்தில் தமிழர் மானம் காற்றில் பறக்கிறது. ஒரு முதலமைச்சரை பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாம் என ஒரு முதலமைச்சர் சொன்னது சுதந்திரம் பெற்ற பின்னரும் சரி சுதந்திரத்திற்கு முன்னரும் சரி இதுவே முதல்முறை.

இதைவிட தமிழகத்திற்கு தலைகுனிவு இனிமேல் ஏற்படப் போவதில்லை. கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளின் இருப்பை பார்த்து தான் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆணையம் கொடுத்த எந்த உத்தரவையும் கர்நாடகா நிறைவேற்றவில்லை நீர்வளத்துறை தமிழக அமைச்சரிடம் என்ன கேள்வி கேட்டாலும் அவரிடம் எந்த பதிலும் இல்லை. அவருக்கு எதுவும் தெரியாது. கர்நாடக விவகாரம் குறித்து பேசாத அமைச்சர் ஜனநாயகம் படத்திற்கு சென்று பாப்கார்ன் சாப்பிடுவதற்கு தான் வாய் திறக்கிறார். நீர்வளத்துறை அமைச்சர் ரீல் போடும் அமைச்சரே தவிர ரியல் அமைச்சர் கிடையாது. 

நீர்வளத் துறை அமைச்சருக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான் விஜய் இட்டுட்டு வந்து இட்டுட்டு போவது மட்டும் தான். அதற்கு தான் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழக அமைச்சர்களுக்கு அனுபவம் இல்லை என்று சொல்வதை விட அணுகுமுறையே தவறு என தான் சொல்ல வேண்டும். 

தமிழக முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேச செல்வேன் என சொல்வது பைத்தியக்காரத்தனமான முடிவு. காவிரி ஆணையம் இப்போது கொடுத்த உத்தரவை கூட கர்நாடகா நிறைவேற்ற மறுக்கும் நிலையில் கர்நாடக முதலமைச்சரை சந்திக்க செல்வது மோசமான அணுகுமுறையின் காரணமாகத்தான் தமிழகத்திற்கு இந்த தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. 

காவிரி தண்ணீர் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. ஆனால் தமிழக அமைச்சரவியின் நடைமுறை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் உள்ளது. 50 ஆண்டுகள் தீர்க்கப்படாத பிரச்சனையை ஒரு வாரத்தில் தமிழக முதலமைச்சர் தீர்ப்பார் என தமிழக அமைச்சர்கள் சொல்கிறார்கள். எப்படி தீர்வு காண்பார் என்பதை மக்களிடம் ஆவது சொல்ல வேண்டும். எதைக் கேட்டாலும் ஒரு வாரத்தில் தீர்வு காண்போம் என மட்டுமே தமிழக அமைச்சர்கள் தெரிவிக்கிறார்கள். 

கர்நாடகாவில் தண்ணீர் கிடைக்காததால் 20 மாவட்டங்கள் குடி தண்ணீருக்கு கூட தண்ணீர் இல்லாத நிலையில் உள்ளது. ஓட்டு வாங்குவதற்காக சாத்தியம் இல்லாத திட்டங்களை அறிவிக்க மாட்டார் என முதலமைச்சர் மேடைக்கு மேடை பேசினார். ஆனால் எதுவுமே சாத்தியமாக நடைபெறவில்லை. லஞ்ச ஒழிப்பு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இலவச நம்பர், பீடி கம்பெனிக்கு செல்கிறது. இதனை நான் சொன்னால் அரசியல் கால் புணர்ச்சி என்று சொல்கிறார்கள். ஆனால் அவரது கூட்டணி கட்சியின் சேர்ந்த நபரை சொல்கிறார். தமிழகத்தில் லஞ்சம் ஊழல் ஒழியவில்லை. ஊழல் லஞ்சம் ஒழிந்ததாக மாயையை கட்டமைக்கிறார்கள். 

விஜய் பிம்பம் மாயையாக எப்படி கட்டமைக்கப்பட்டதோ அதுவே போல் பஞ்சு டயலாக்கில் பஞ்சராகி போய் உள்ள தமிழகத்தை மாய பிம்பத்தில் கட்டமைப்பதற்கு நினைக்கிறார்கள். தமிழகத்தின் தலையெழுத்து ரயில் செய்தி மட்டும் தான் உள்ளது. யார் பார்ட்டி பண்டு பெற்றார்கள் என இதுவரை தெளிவாக தமிழக முதலமைச்சராக அமைச்சர்களோ சொல்லவில்லை. ஏஜெண்டுகளை வைத்துக்கொண்டு இன்புளியூசர்களை வைத்துக்கொண்டு பொத்தாம் பொதுவாக மிகைப்படுத்தி அனைத்தும் சொல்லப்படுகிறது. நடைமுறையில் எதார்த்தம் என்ன என்பதை தமிழக வெற்றி கழகத்தினர் புரிந்து கொள்ளும் வரையில் தமிழகத்தில் கஷ்டம் அவலம், கண்ணீர், போன்றவை தொடர்கதையாக தான் இருக்கும் என தெரிவித்தார்.

Related

“கந்தல் துணிகளால் போர்த்தப்பட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர் : பக்தர்கள் வேதனை”