திருவள்ளூர்: அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தாங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் சிற்றரசூர் வட கிராமம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு 4 வது ஆண்டாக தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 24, ஆம் தேதி பந்தக்கால் உடன் தொடங்கி கணபதி ஹோமம் நடைபெற்றது. வாடை பொங்கல், தீபாராதனை, அம்மன் அழைப்பு உள்ளிட்டவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதம் இருந்து தீக்குழியில் இறங்கி ஓம் சக்தி பராசக்தி என்று முழக்கமிட்டு தீமிதித்து தாங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.

அப்போது சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அசம்பாவிதம் தவிர்க்க வன்னன் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடை சிற்றரசூர் வட கிராம முருகேசன், சந்திரன், நாகப்பன்,குமார் உள்ளிட்ட பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஏகே ராம் முதலியார், எஸ் முரளி முதலியார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திருமலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கர், டில்லி, சோனு, வரதன், மதி, முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.