தேனி: தமிழ் நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் உடன் பிறந்த சகோதரி இல்ல விழாவில் வெடி வெடித்து மேளதாளம் முழங்க சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக சென்று பங்கேற்றார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை உழவர் சந்தை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்றார்.
அப்போது அமைச்சர் கீர்த்தனா தனது உறவினர்கள் மேளதாளத்துடன் சீர் சுமந்து வந்த பொழுது அமைச்சரும் இணைந்து சீர் சுமந்து ஊர்வலமாக மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.
தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவிற்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.
திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சகோதரியின் மகளுக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தார்.
இல்ல விழாவில் பங்கேற்று விட்டு புறப்பட்ட அமைச்சர் கீர்த்தனாவிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்ற போது, சந்திப்பை தவிர்த்து விட்டு வேகமாக கிளம்பி சென்று விட்டார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.