திண்டுக்கல்: 100 கோடி ரூபாய் பழனி கோயில் நில மோசடி வழக்கு தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை நீதிமன்ற உத்தரவுகளை மீறி போலி ஆவணங்கள் மூலம் 2 கோடி ரூபாய்க்கு மோசடி பதிவு செய்யப்பட்டது. சம்பந்தமாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் போலி டிரஸ்ட் பிரமுக முருகதாஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது ஐந்து பிரிவுகளும் கீழ் காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 100 கோடி ரூபாய் மோசடி வழக்கை விசாரணை செய்வதற்காக தமிழக டிஜிபி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் 16ம் தேதி பழனியில் சிபிசிஐடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பழனியில் விசாரணை மற்றும் கள ஆய்வு செய்தனர். இந்நிலையில் நேற்று திண்டுக்கல் சி பி சி ஐ டி அலுவலகத்திற்கு அறநிலையத்துறை வழக்கு தாக்கல் செய்த முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகளை வரவழைத்து மதுரையில் இருந்து திண்டுக்கல் வருகை தந்த சிபிசிஐடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாஜிதா நேரில் விசாரணை செய்தார்.
இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவுண்ட் ரோடு பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வரும் பத்திரப்பதிவு முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டிற்கு எட்டுக்கும் மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள் இரண்டு வாகனங்களில் வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணையும் ஆய்வும் மேற்கொண்டு வருகின்றனர்.சிபிசிஐடி விசாரணையால் இப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக சிபிசிஐடி விசாரணை இன்று காலையிலேயே தொடங்கியது மேலும் பரபரப்பை கூட்டி உள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.