பெங்ஷூயி : சீனாவின் தென்மேற்கு மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவினால், அங்கு வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகத் வெளியாகி வருகிறது. 

சீனாவின் பெங்ஷூயி மாகாணத்தில் உள்ள சோங்கிங் நகரத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) காலை 9 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி அங்குள்ள 10-க்கும் அதிகமான அடுக்குமாடி கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்ததுள்ளன. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு மீட்புப் படையினர் களமிறக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதியில் வசித்து வரும் 1,100-க்கும் அதிகமான மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா நிலச்சரிவு.

இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை இடிபாடுகளுக்குள் இருந்து 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, நிலச்சரிவால் அப்பகுதியில் மின்சாரக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 கி.மீ. சுற்றளவிற்கு தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், வூஜியாங் ஆற்றின் அருகிலுள்ள மலைப்பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சமநிலை அற்ற மலைப்பகுதியில் இருந்த கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதால் அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்வது மேலும் கடினமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

“தனக்கு பிடிக்கவில்லை என்றால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: 'டிரம்ப் எச்சரிக்கை”