தூத்துக்குடி:  தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் உலகப் புகழ்பெற்ற பணிமய மாதா பேராலயத்தில் வழிபாடு நடத்தினார். 
தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சென்னையிலிருந்து நெல்லையில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக நிதி அமைச்சரும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மரிய வில்சன் இன்று தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.

பணிமய மாதா பேராலயத்தில் நிதியமைச்சர் மரியவில்சன் பிரார்த்தனை


இதைத் தொடர்ந்து தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தூத்துக்குடி உள்ள உலக புகழ்பெற்ற பணிமயமாதா பேராலயத்தில் வருகிற ஜூலை 26 ஆம் தேதி 444 வது ஆண்டு விழா திருவிழா கொடியேற்றுத்துடன் துவங்க உள்ள நிலையில் மாதா கோவிலில் சென்று வழிபாடு நடத்தினார்.

மக்களிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் மரிய வில்சன்.


மேலும் விழா ஏற்பாடுகள் குறித்து ஆலய பங்குத்தந்தை  ஜான் செல்வதுடன்  ஆலோசனை நடத்தினார் மாதாவிற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் வழிபாடு நடத்தினார்.முன்னதாக பணிமயமாதா பேராலம் வந்த தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு தமிழக வெற்றிக்கழகத்தினர் வரவேற்பு அளித்தனர்
 

குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்ட தூத்துக்குடி நகர மக்கள்.
Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”