திருநெல்வேலி:
திருநெல்வேலி மாநகராட்சியின் அவசரம் மற்றும் சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர ஆணையாளர் மோனிகா ரானா மற்றும் திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு ஆகியோர் கலந்து கொண்ட மாமன்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் படம் வைக்கப்பட்டு இருக்கும் அதே நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் படத்தையும் வைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் படத்துடன் மாநகராட்சி மேயர் இருக்கையை முற்றுகையிட சென்றபோது திமுக உறுப்பினர்களும் எழுந்து சென்று மேயர் மேஜை முன்பு நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதிமுக மற்றும் திமுக இரண்டு தரப்பு மாவட்ட உறுப்பினர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் மாறி மாறி முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாமன்ற கூட்டத்தில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து மாநகராட்சியின் மேயர் ராமகிருஷ்ணன் மாமன்ற உறுப்பினர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டால் சஸ்பெண்ட் செய்து விடுவேன் என மேயர் எச்சரிக்கை விடுத்த நிலையில் அதிமுக திமுக மாவட்ட உறுப்பினர்கள் தங்களது இருக்கைக்கு சென்றனர்.
தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சியின் குடிநீர் கட்டண உயர்வு உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த அவசர கூட்டத்தில் 94 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குடிநீர் கட்டணம் 50% முதல் 200 சதவீதம் வரை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டம் தொடங்கிய எட்டு நிமிடத்தில் அனைத்து தீர்மானங்களும் பாஸ் என்று அறிவித்துவிட்டு மேயர் புறப்பட்டு சென்றார்.
வீடுகளுக்கு நூறு ரூபாய் குடிநீர் கட்டணம் வசூல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 600 சதுரடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு 120 ரூபாயும் 1200 சதுரடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு 150 ரூபாயும், 1800 சதுரகிரிக்கு உட்பட்ட வீடுகளுக்கு 180 ரூபாயும், பத்தாயிரம் சதுரஅடி உள்ள வீடுகளுக்கு 300 ரூபாய் குடிநீர் கட்டணம் வசூல் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியிருப்பு தொடர்ந்து வணிக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் குடிநீர் கட்டணம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து சில தீர்மானங்களை மட்டும் வாசித்த மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் அனைத்து தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே திருநெல்வேலி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதனால் மாமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களை நிறுத்தி வைக்க மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை கடிதம் அளித்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மன்ற கூட்டத் தொடரில் இன்று நடைபெற்ற நிலையில் தீர்மானம் 59 மற்றும் 60 இரண்டும் பாதாளசாக்கடை மற்றும் குடிநீர் கட்டணம் உயர்வு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது இரண்டையுமே நிறுத்தி வைக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் மேயர் ராமகிருஷ்ணன் இடம் மனு அளித்துள்ளனர்

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.