கிருஷ்ணகிரி:
பர்கூரில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழாவில் 15 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ஐ.உம்மர் பாஷா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்வகுமார் ஆகியோர் வழங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஐ. உம்மர்பாஷா ஏற்பாட்டில் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் எனப் போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான ஐ. உம்மர் பாஷா, தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான டாக்டர் செல்வகுமார், கலந்துகொண்டார். பர்கூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி, மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் திருஉருவச் சிலைக்கு டாக்டர் செல்வகுமார், மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பர்கூர் ஐ.இ.எல்.சி மான்ஸ், மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி மற்றும் தங்கும் விடுதி பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவில், காமராஜரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பள்ளியில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு சீருடைகளும் மதிய உணவுகளும் வழங்கப்பட்டது.தொடர்ந்து பர்கூர் அசோக் மஹால் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இத்த நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு கிழக்கு மாவட்ட பொருளாளர் ஐ.உம்மர்பாஷா, தலைமை வகித்தார். இவரது தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்வகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றி பேசினார். அப்போது, கர்மவீரர் காமராஜர் அவர்கள் தமிழக முழுவதும் மாணவர்கள் கல்வி கற்றால் தான் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்ற உன்னத நோக்கத்தில் பள்ளிக்கூடங்கள் திறந்தார். தமிழகத்தில் முதல் முதலாக மதிய உணவு திட்டத்தை தொடங்கினார். ஏழை பணக்கார மாணவர்கள் பாகுபாடு இருக்கக் கூடாது என என்று பள்ளி சீருடைகள் முதல் முதலாக கொண்டு வந்ததும் அவர் தான்.

தமிழக முழுவதும் தொலைநோக்கு பார்வையுடன் அணைகள் கட்டி தண்ணீர் தேக்கி தமிழகத்தில் உள்ள விளைநிலங்களும் பாசனம் பெரும் வகையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் தமிழக மக்களையும் காத்தவர் பெருந்தலைவர் காமராஜர் எனக் கூறினார். தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தை தற்போதுள்ள மோடி அரசு முடக்க முயற்சித்தது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் அகில இந்திய அளவில் எழுந்த எதிர்ப்புகள் கிழப்பவே நாங்கள் 125 நாள் வேலை வாய்ப்பு தருகிறோம் எனக் கூறி அதில் 70 நாள் வேலை வாய்ப்பிற்கான தொகையை மத்திய அரசு தரும் மீதி நாட்களுக்கான தொகையை மாநில அரசுகள் தர வேண்டும் என மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தை மோடி அரசு முடக்க முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகளுக்காக குரல் கொடுத்து இந்திய மக்களின் நலனுக்காக போராடி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.தொடர்ந்து விழாவின் போது கல்வி உதவித்தொகை, கணவனை இழந்த கைப் பெண்களுக்கு உதவித்தொகை, நலிவுற்ற முதியோர் காப்பகங்களுக்கு உதவித்தொகை மற்றும் இரண்டாயிரம் பேருக்கு புடவைகள் என 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நல திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவின் போது மாநில செயலாளர் ஆறுமுகம், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிஸ் பாபு, மாநில பேச்சாளர் நாஞ்சில்

ஜேசு துரைராஜ், பர்கூர் சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், நகரத் தலைவர்கள் யுவராஜ், முபாரக், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிஷ்பாபு, கலைப் பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, சேவதாள மாவட்ட தலைவர் தேவராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சக்கரவர்த்தி, ராமன், மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன், வட்டாரத்தலைவர்கள் தனஞ்செயன், தனசேகர், ஜெயவேல், செல்வராஜ், கவியரசு, சுந்தர்ராஜ்.
மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர்கள் உமாசங்கரி, உமா மகேஸ்வரி, பர்கூர் கீதா, உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவின் போது கடந்த 19 ஆண்டுகளாக தன்னுடைய சொந்த செலவில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளினை முன்னிட்டு சாதி மத வேறுபாடுகள் இன்றி நலத்திட்ட உதவிகளை செய்து வரும் மாவட்ட பெருலாளர் ஐ.உம்மர்பாஷா அவர்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்வகுமார் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.