"Pitch. Get Funded. Win Prizes." என்ற முழக்கத்துடன், AI மற்றும் Agri-Tech துறைகளில் வருவாய் ஈட்டும் தொடக்க நிறுவனங்களை அடையாளம் கண்டு, நிதி உதவி மற்றும் பரிசுகள் வழங்கும் நோக்கில் GRG Gen Nxt Incubator நிறுவனம் LaunchPad போட்டியை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள நிறுவனங்கள் பங்கேற்கலாம். குறிப்பாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான ஸ்டார்ட்அப்களை கண்டறிவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சந்திரா டெக்ஸ்டைல் மில் வளாகத்தில் அமைந்துள்ள ஜி.ஆர்.ஜி_ஜென் நெக்ஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்றது இதில் பேசிய நிறுவனத்தின் சி.இ.ஓ சோன்பால் மற்றும் மேலாளர் ஹரி கிருஷ்ணன் கூறியதாவது.

லான்ச் பேட் எனும் போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த நிகழ்வில் பல்வேறு நிறுவனங்கள் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் வென்ச்சர் கேபிடலிஸ்டுகள் தனி நபர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியானது உள்ளூர் கோவை திறமையாளர்களை கண்டறிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடத்தப்பட உள்ளது இந்த போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை ஜூலை 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்த போட்டி ஜூலை 24"ம் தேதி மாலை "4 மணி முதல் 7" மணி வரை நடைபெறும் எனத் தெரிவித்தார்.

 இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தகுந்த பரிசுகளும் வழங்கப்படும். Startup TN உடன் இணைந்து நிதி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அக்ரி-டெக் (Agri-Tech) துறைகளில் உயர் திறன் கொண்ட தொடக்க நிறுவனங்களைக் கண்டறிந்து நிதியுதவி வழங்கும் நோக்கில் “LaunchPad” எனும் பிட்ச் போட்டியில்  நிறுவனர்கள் - ஏஞ்சல் முதலீட்டாளர்கள், வென்ச்சர் கேபிடலிஸ்டுகள் மற்றும் உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (HNIs) ஒன்றுகூடி, தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க நிறுவனங்களில் ₹50 லட்சம் வரை முதலீடு செய்யத் தயாராக உள்ளனர் என்பதும்

மேலும் “Pitch. Get Funded. Win Prizes.” என்ற வாசகத்துடன், "LaunchPad" போட்டியானது கோயம்புத்தூர், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து வருவாய் ஈட்டும் நிலையிலுள்ள AI மற்றும் Agri-Tech தொடக்க நிறுவனங்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது மேலும் கோவை மாவட்டத்தில்  திறமையாளர்களைக் கண்டறிந்து  முதன்மை முக்கியத்துவம் அளிக்கப்படும்  
என இவ்வாறு தெரிவித்தனர்.

Related

“கோவை சரவணம்பட்டியில் அட்வான்ஸ்டு குரோஹேர் & குளோஸ்கின் கிளினிக்கின் 150-வது கிளை திறப்பு”