சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.

நடுமாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக இப்போட்டி நடைபெற்றது. நடு மாட்டு பிரிவில் 21 ஜோடி மாடுகளும் சின்ன மாட்டுப் பிரிவில் 16 ஜோடி மாடுகளும் என மொத்தம் 37 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. காளையார்கோயில் - தொண்டி சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

போட்டியில் மாடுகள் சிறுபாய்ந்து சென்று ஒன்றை ஒன்று முந்தி சென்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா குழுவினர் சார்பில் ரொக்கம் மற்றும் கோப்பை பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தினை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான ரசிகர்கள் உற்சாகதோடு கண்டு களித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.