ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து சுமார் 20 வயது ஆண் யானை பலி - வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை .

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வடகாடு ஊராட்சிக்கு உட்பட்ட பரப்பலாறு அணைப்பகுதியில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பெயரில் திண்டுக்கல் மண்டல வன பாதுகாவலர் முகமது சவாப், கொடைக்கானல் பொறுப்பு மண்டல அலுவலர் அரவிந்த், வன அலுவலர் குமரேசன், தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் பரப்பலாறு அணைக்கு தண்ணீர் தேடி வந்த சுமார் 20 வயது உள்ள ஆண் யானை வனப்பகுதியில் இருந்த உயர் அழுத்த மின் கம்பியில் மோதி உயிரிழந்ததாக தெரிவித்தனர், அதனைத் தொடர்ந்து மதுரை வனத்துறை கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானைக்கு பிரேத பரிசோதனை செய்து இறந்த யானையை அந்த இடத்திலேயே ஜே சி பி இயந்திரம் மூலம் குழிதோண்டி புதைத்தனர்.

மேலும் பரப்பலார் அணை பகுதியில் தண்ணீர் தேடி வந்த யானை மின்சார கம்பியில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த பொதுமக்களை பரபரப்பில் ஆழ்த்தியது. மேலும் யானை உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”