தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாநகர காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உத்தரவின் பேரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பகுதியில் மாவட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஏ.செய்யது அலி ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் பிரமுகர்கள், வியாபார பெருமக்கள் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப் படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். 

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவில் மாநகர் காங்கிரஸ் நிர்வாகிகள், வியாபாரிகள்.

வியாபாரிகள் சங்க தலைவர் கிறிஸ்டோபர், எஸ். சந்தனவேல், கோவை ஜே. முனீஸ்வரன், ஜே.முனியசாமி உள்ளிட்ட பிரமுகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் உடற்பயிற்சி ஆசிரியர் அலெக்ஸ், வியாபாரிகள் சங்க ஆலோசகர் ஏ.துரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி மார்க்கெட் பகுதியிலும் மாநகர் மாவட்டத் தலைவர் சகாயராஜ் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகர காங்கிரஸ் செயலாளர் ஏ.செய்யது அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”