சென்னை: மது விற்றுத்தான் ஆட்சியை நடத்த வேண்டிய சூழலில் அரசு நகர்கிறது என தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் சிறப்பு தலைவர் வழக்கறிஞர் கு.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.  

தமிழ்நாட்டில் ரெஸ்டோபார்களை அரசு அறிமுகம் செய்வது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் சிறப்பு தலைவர் வழக்கறிஞர் கு.பாரதி, தமிழ்நாட்டில் உணவகங்களில் மது அருந்தலாம் என்ற திட்டத்தை (ரெஸ்டோபார்களை) தமிழக அரசு செயல்படுத்த உள்ளதாக செய்திகளை கசிய விட்டிருக்கிறார்கள். அதேபோல் தமிழ்நாட்டில் 54 புதிய வகை மதுகளை அரசு அறிமுகப்படுத்த உள்ளனர். மது இல்ல தமிழகம் என கூறிக் கொண்டிருந்த அரசும் மதுவிலக்கு துறை என உள்ள நிலையில் மதுவை விற்று தான் ஆட்சியை நடத்த வேண்டிய சூழலை நோக்கி நகருவதை போன்று உள்ளது. மனமகிழ் மன்றங்களில் அதிக விலைக்கு மதுவை விற்றதாக இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு  எடுக்கவில்லை. 

இப்படி ஒரு சூழலில் குடும்பம் மற்றும் நண்பர்களாக சாப்பிட செல்லும் இடத்தில் மது குடிக்கலாம் என்ற கலாச்சாரத்தை கொண்டுவர நினைக்கின்றனர். இது போன்று செய்வது தமிழ்நாட்டிற்கு நல்லதும் இல்லை மதுபானத்தை நம்பி ஆட்சியை நடத்துவோம் என்ற எண்ணத்தில் இருப்பது தமிழ்நாட்டிற்கு ஆபத்தை கொண்டு வரும். உணவகங்களில் மது (ரெஸ்டோ பார்) அருந்தும் கலாச்சாரத்தை அரசு கொண்டு வருவதை நிறுத்த வேண்டும். இளைஞர்களும் சாதாரண ஏழை ஜனங்களும் மதுப்பொருள் குறித்து உடல்நலம் கெடுவது மட்டுமில்லாமல் அதிலிருந்து வெளியே வர முடியாமல் உள்ளனர். 

மது குடித்து உடல்நலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வர மறுவாழ்வு முகாம்களை அரசு அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும். அரசு நடத்தும் மதுக்கடைகள் மூலம் பாதிக்கப்படுவதால் அரசு இந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஹெராய்ன், பிரவுன் சுகர் போன்ற போதைகள்  மட்டும இளைஞர்களை சீரழிக்கும் பெண்களுக்கு எதிராக குற்றங்களை நிகழ்த்த காரணமாக உள்ளது. மதுவும் மக்கள் கெட்டுபோக  முக்கிய காரணமாக உள்ளது. 

ரெஸ்டோ பார்.

பணி நிரந்தரம் 23 ஆண்டுகள் பணி புரிந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கி மாற்று துறையில் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மார்க் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 

கர்நாடகாவில் இருந்து உணவகங்களில் மது அருந்தும் திட்டத்தையும் புதிய 54 வகை மக்களையும் மற்ற மாநிலங்களை பார்த்து இத்திட்டத்தை அமல்படுத்துவதாக அமைச்சர் கூறுவது மிகப்பெரிய ஆபத்து. 54 புதிய மதுவகைகளை அறிமுகப்படுத்துகிறோம் நீங்கள் குடியுங்கள் எனக் கூறுவது போல் உள்ளது. 

மற்ற மாநிலங்களில் இருந்து இது போன்ற திட்டங்களை கொண்டு வரும் அரசு கேரளாவில் உள்ளது போல 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்க  தயாராக உள்ளனரா என கேள்வி எழுப்பினார். முந்தைய ஆட்சியில் மதுபான முதலாளிகளுக்கு லாபம் சேரக்கூடாது என்பதற்காக புதிய மதுபானங்களை கொண்டு வருவது வேறு எங்கள் நோக்கம் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான், டாஸ்மாக், மனமகிழ் மன்றங்கள், ரெஸ்டோபார்களை கொண்டு வருவது பொதுமக்களின் உயிருக்கு தான் ஆபத்து என்பதால் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலங்கள் சார்பில் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”