கிருஷ்ணகிரி அருகே அவதானபட்டியில் மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழா - கிராம தெய்வங்களுடன் ஊர்வலம் ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு தட்டுடன் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிப்பட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானபட்டியில் மாரியம்மன் கோவிலின் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக அவதானபட்டி, நெக்குந்தி மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு, சிறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.
இதில் மேளத்தாளங்கள் முழங்கிட , தர்மபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெஞ்சாலை வழியாக கிராம தெய்வங்களை ஊர்வலமாக எடுத்து வந்த பத்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், அம்மன் வேடமணிந்தும், கரகம் எடுத்தும் வந்து அம்மனை வழிபட்டனர்.

இதில் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ஆடுகள், கோழிகளை அம்மனுக்கு பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இந்த விழாவில் கிருஷ்ணகிரி, அவதானப்பட்டி, நெற்குந்தி, காவேரிப்பட்டிணம், திம்மாபுரம், பெரியமுத்தூர், சின்ன முத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு மாரியம்மனை வழிப்பட்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.