சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினத்​தையொட்​டி, சென்​னை​யில் வரும் 7-ம் தேதி அமை​திப் பேரணி நடை​பெறுகிறது.

இதுகுறித்து திமுக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் 8-ம் ஆண்டு நினை​வு​நாளை​யொட்​டி, திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அமை​திப் பேரணி நடை​பெறவுள்​ளது.

ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்​தூ​ரார் வளாகத்​தில் அமைந்​துள்ள கருணாநிதி சிலை அரு​கில் இருந்து அமை​திப் பேரணி தொடங்​கி, மெரினா கடற்​கரை வரை நடை​பெறுகிறது.

மெரினா கடற்​கரை​யில் உள்ள கருணாநிதி நினை​விடத்​தில் மலர்​வளை​யம் வைத்து அஞ்​சலி செலுத்​தப்​படும்.

பேரணி​யில் திமுக பொதுச்​செயலா​ளர் துரை​முரு​கன், பொருளாளர் டி.ஆர்​.​பாலு, முதன்​மைச் செய​லா​ளர், துணை பொதுச்​செய​லா​ளர்​கள், முன்​னாள் அமைச்​சர்​கள், நாடாளு​மன்ற, சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள், மாவட்​டச் செய​லா​ளர்​கள் பங்​கேற்​கின்​றனர்.

எனவே, சென்னையின் திமுக நிர்​வாகி​கள், அனைத்து சார்பு அணி​களின் உறுப்​பினர்​கள் மற்​றும் பிர​தி​நி​தி​கள் அனை​வரும் தவறாமல் பங்​கேற்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Related

“தமிழக பட்ஜெட் 2026-27 சி்றப்பு அம்சங்கள் என்னென்ன? - நிதியமைச்சர் மரிய வில்சன் ”