சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு விதிகளை மீறி அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹார்ன் பொருத்தி இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அளித்த புகாரின் பேரில், காரைக்குடி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பேருந்துகளை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், அரசு விதிகளுக்கு முரணாக அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் அந்த ஏர் ஹார்னை உடனடியாக அகற்றி, மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் அதே அரசு அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் டயருக்கு அடியில் வைத்து நொறுக்கி அழித்தனர்.
பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் விதிமீறி ஏர் ஹார்ன் பயன்படுத்தும் வாகனங்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.