தூத்துக்குடியில் உள்ள உலக புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444ம் ஆண்டு திருவிழா சிறப்பு திருப்பலி : மாதா சொரூப பவனி பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு.
தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் 444 ஆம் ஆண்டு கால பழமை வாய்ந்த தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் உலக பிரசித்தி பெற்றதாகும் இந்த பனிமய மாதா பேராலயத்தின் 444வது ஆண்டு திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த திருவிழாவில் கிறிஸ்துவ மக்கள் மட்டுமின்றி இந்துக்கள் இஸ்லாமிய பெருமக்களும் திரளாக கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பிப்பது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இந்த விழாவை முன்னிட்டு தூய பனிமய மாதா பேராலயம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது 10ம் திருவிழாவான இன்று திருவிழா சிறப்பு திருப்பலி தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டிபன் தலைமையில் நடைபெற்றது.

இந்த திருப்பலியில் 50க்கும் மேற்பட்ட அருட்தந்தைகள் மற்றும் பல்லாயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர் மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பனிமய மாதாவின் சொரூப பவனி நடைபெற்றது ஆலயத்தின் முன்பாக இருந்து புறப்பட்ட பனிமய மாதாவின் சொரூப பவனி நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்று மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்தது இந்த சொரூப பவனியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்.
இந்த திருவிழாவில் தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலம், மற்றும் இலங்கை சிங்கப்பூர் வளைகுடா வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர்.
இந்த திருவிழாவையொட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.