சென்னை: திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி இல்லத்துக்கு இன்று காலைவந்த காவல்துறையினர், வழக்குகள் குறித்து விளக்கம் கொடுத்து விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்றனர். தஞ்சாவூரில் காவேரி பிரச்சனை குறித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசிய போது, முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி கைது செய்யப்பட்டு தஞ்சை அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர் மீது பதிவான வழக்குகள் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது. உதயநிதி கைது செய்யப்பட்டு தஞ்சை அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர் மீத பதிவான வழக்குகள் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது. பிஎன்எஸ் (BNS) பிரிவு 196 - சமூகங்களுக்கிடையே பகைமையை அல்லது வெறுப்பைத் தூண்டும் வகையிலான செயல்கள் அல்லது பேச்சு. பிஎன்எஸ் (BNS) பிரிவு 192 - கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் தூண்டுதல், பிஎன்எஸ் (BNS) பிரிவு 352 - அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவமதித்தல்.
பிஎன்எஸ் (BNS) பிரிவு 79 - பெண்ணின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தை, சைகை அல்லது செயல், பிஎன்எஸ் (BNS) பிரிவு 296(b) பொது இடத்தில் அல்லது பொதுமக்கள் காணக்கூடிய இடத்தில் ஆபாசமான வார்த்தைகள் அல்லது செயல்கள், பிஎன்எஸ் (BNS) பிரிவு 61 - குற்றச் சதி (Criminal Conspiracy), பிஎன்எஸ் (BNS) பிரிவு 351(2) கடுமையான குற்ற மிரட்டல் (Criminal Intimidation),
தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், 2002 - பிரிவு 4 - பெண்களை துன்புறுத்துதல் தொடர்பான குற்றம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 பிரிவு 67 மின்னணு ஊடகங்களில் ஆபாசமான தகவல், படம் அல்லது விடியோவை வெளியிடுதல் அல்லது பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.