சென்னை: கண்ணகி நகரில் உமன்ஸ் லீக் ஃபவுண்டேஷன் சார்பில் மாற்றுத் திறனாளி குடும்பத்தினரின் குழந்தைகள் 200 பேருக்கு ஸ்கூல் பேக், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
சென்னை கண்ணகி நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில், உமன்ஸ் லீக் ஃபவுண்டேஷன் மற்றும் பெலக்ஸ் நிறுவனம் இணைந்து, மாற்றுத்திறனாளி குடும்பத்தினரின் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி குடும்பத்தினரின் மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு சுமார் 200 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பள்ளிப் பை, நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் உமன்ஸ் லீக் ஃபவுண்டேஷன் நிறுவனர் திவ்யா கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
கல்வி உபகரணங்களை பெற்றுக் கொண்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், இதுபோன்ற உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என நன்றியையும் தெரிவித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.