சென்னை: வட மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதன் பேரில் தாம்பரம் மதுவிலக்கு போலீசார் குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

சிறுகளத்தூர் மீன் மார்க்கெட் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த காரின் அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது காரில் 56 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த மூன்று நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் பிடிபட்டவர்கள் ஒடிசா மாநிலத்தில் தங்கி வசித்து வந்த வெங்கட சுப்பிரமணியன்(37), பல்லாவரத்தைச் சேர்ந்த சுமன்(23), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ்(என்ற) பட்லு(22), என்பதும் வெங்கடசுப்பிரமணியன் தஞ்சாவூர் மாவட்டத்தை சொந்தமாக கொண்ட இவர் கஞ்சா விற்பனை செய்வதற்காக ஒடிசா மாநிலத்தில் தங்கி இருந்ததும் அங்கிருந்து ரயில் மூலம் எடுத்து வந்தால் போலீசாரிடம் சிக்கிக் கொள்வோம் என்பதற்காக ஒடிசா மாநிலத்தில் இருந்து அஞ்சல் துறை மூலமாக பெட்டிகளில் கஞ்சாவை பார்சலாக பல்லாவரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். 

மேலும் போலீசாருக்கு வாசனை ஏதும் வராமல் இருப்பதற்காக கஞ்சா பார்சல் அனுப்பும் பெட்டிகளின் மீது மஞ்சள் தூளை 

தடவி அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்தது இதையடுத்து பல்லாவரம் அஞ்சல் துறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 இவர்களிடமிருந்து மொத்தம் 156 கிலோ கஞ்சா, ஒரு சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் வேறு எங்காவது இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

“அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன்: அரசு, தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை”