திருவள்ளூர்: பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 222 மாணவர்களுக்கு கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்விச்சீரும், உதவித்தொகையும் மாணவர்களுக்கு  வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் வஞ்சிவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் "கற்கை நன்று கிராமக் கல்வி கட்டளை" சார்பில்  ஆண்டுதோறும் ஏழை,எளிய மாணவர்களுக்கு கல்விச்சீர் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 8-வது ஆண்டாக 222 மாணவர்களுக்கு  கல்வி கட்டணம் மற்றும் புத்தகப்பை,நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் தலைமை அழைப்பாளர்களாக திரு .அருள்தாஸ் (மாநில அமைப்பு செயலாளர், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள்   நலச்சங்கம்), திரு சதீஷ்குமார் (முதல்வர் ஆதர்ஷ் குளோபல் வித்யாஷ்ரம்), திரு ஆனந்தபாபு (தாளாளர், சத்தியஜோதி மெட்ரிகுலேஷன் பள்ளி) கலந்து கொண்டனர்.

"கற்கை நன்று கிராமக் கல்வி கட்டளை" சார்பில் மாணவர்களுக்கு கல்விச்சீர்!

கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளை தலைவர் வடிவேல் செயலாளர் கார்த்திக் பொருளாளர் நவீன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்    சிறப்பு அழைப்பாளராக அன்புக்கொடி நல்ல தம்பி குடும்பத்தினர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் இளஞ்செழியன், சின்னக்காவணம் வள்ளலார் தாயார் சின்னம்மையர் இல்லம் ரவி, கிராம பார்வை நிறுவனர் முருகன், மேலூர் அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் கோபாலகிருஷ்ணன்,  SEED நிறுவனர் அவிநாசி கலராணி, சென்னை அகர்துளிர் அறக்கட்டளை, பொன்னேரி லயன்ஸ் கிளப்,  மெதூர் சமூக ஆர்வலர் சேகர், திருவெற்றியூர் சமூக ஆர்வலர் ஆனந்த்   கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்விசீரை வழங்கினார். முன்னதாக ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்  இளஞ்செழியன் அவர்களுக்கு கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பாக  "சமூக நீதி போராளி" விருது வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

Related

“லோபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 43வது ஆண்டு துவக்க விழா! ”