திருச்செந்தூர்: 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாழிக்கிணறு முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் 5 மணி நேரமாக பக்தர்கள் காத்திருந்தனர். 

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரித்தலமாக விளங்கி வருகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. நான் கொடுப்பது மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். கோவில் கடலில் புனித நீராடி நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராட சுமார் 5 மணி நேரம் காத்திருந்து வருகின்றனர். கோவிலில் ரூபாய் 100 கட்டணம் தரிசனம் மற்றும் பொது தரிசன வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் அதற்கான டிக்கெட் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து முடி காணிக்கை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related

“ஸ்ரீ ராதாருக்குமணி சமேத கிருஷ்ணன் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா!”