கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கள்ளகாதல் விவகாரத்தில் இராணுவ வீரர், அவரது தந்தை கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மே 11 அன்று கொடுகூர், வெப்பாலம்பட்டி பகுதிகளில் சாலையோரத்தில் எரிந்த நிலையில் கிடந்த இரு சடலங்கள் மீட்கப்பட்டு போலீசார் விசாரனையில் பாலக்குறியைச் சேர்ந்த இராணுவ வீரர் மகேஷ்குமார் (36) அவரது தந்தை செல்லப்பன் (64) என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மகேஷ்குமாரின் மனைவி பானுப்பிரியாவுக்கும் அவரது கள்ளகாதலன் பூவரசனுக்கும் இடையே மகேஷ் குமார் இடையூறாக இருந்ததால் அவரையும், அவரது தந்தை செல்லப்பன் ஆகிய இருவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்து சடலங்களை இருசக்கர வாகனங்களில் கடத்திச் சென்று டீசல் ஊற்றி கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் கொலையாளிகளை தனிப்படை போலீசார் 24 மணி நேரத்தில் இருவரையும் கைது செய்தனர். இவ்வழக்கு பொதுமக்களிடம் தீவிர அச்சத்தையும், சட்ட ஒழுங்கு பாதிப்பையும் ஏற்படுத்தியதால், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் இருவர் மீதும் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் பூவரசன் (19) சேலம் மத்திய சிறையிலும், பானுப்பிரியா (29) கோயம்புத்தூர் மகளிர் சிறப்புச் சிறையிலும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
"கொடூரக் குற்றங்கள் செய்து, ஆதாரங்களை அழித்துத் தப்பிக்க முயல்பவர்கள் சட்டத்தின் நீண்ட கரங்களில் இருந்து தப்ப முடியாது. பொது அமைதியைப் பாதிப்போர் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்" கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.