தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவில் 42 ஆண்டு காலமாக வெற்றிகரமாக நடந்து வரும் லோபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 43வது ஆண்டு துவக்க விழாவும், உலக சுற்றுப்புற சூழல் தினமும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு லோபா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் முனைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சமூகப் போராளி முனைவர் தோழர் மின்னல் அம்ஜத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புவி வெப்பமடைதல் பற்றி தங்களது கருத்துக்களை பதிவு செய்தார்.

சிறப்பு அழைப்பாளராக  மாரிச்செல்வம் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதில் அப்பள்ளியின் முதல்வர் வெங்கட சுப்பிரமணியம் மற்றும் நிர்வாக ஆசிரியர் எஸ்தர், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, மைம் போன்றவற்றில் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Related

“பொறியியல் படிப்புக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்: ஜூன் 29-ல் தரவரிசைப் பட்டியல்”