சென்னை: விடுதலை சிறுத்தை கட்சியின் சோழிங்கநல்லூர் தொகுதி மாவட்ட செயலாளர் ரியல் மா ரஜினி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சோழிங்கநல்லூர் தொகுதி மாவட்ட செயலாளர் ரியல் ஆர் ரஜினி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொருளாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி மற்றும் சூ.க. விடுதலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து நிர்வாகிகளுக்கு சார்பு அறிவித்து அவர்களை ஊக்கப்படுத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அடுத்த கட்ட கட்சியின் வளர்ச்சி குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி நிர்வாகிகள் இடையே பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் தொகுதி மாவட்ட பொருளாளர் மேடவாக்கம் லாரன்ஸ் மற்றும் செய்தி தொடர்பாளர் மதிவளவன், சோழிங்கநல்லூர் கதிர், ஜெகதீஷ், கேட் சேகர், மாவட்ட செயலாளர் இளைஞர் அணி. பெரும்பாக்கம் தாமு, பள்ளிக்கரணை வீரமணி, வழக்கறிஞர் ஸ்ரீதர், கலைவேந்தன், அப்பாஸ் அலி, பாலவாக்கம் தனசேகர், கொட்டிவாக்கம் பாஸ்கர், விமல் வளவன், விடுதலை ராஜ், விமல் ராஜ், துரைப்பாக்கம் மதன், விநாயகம் உலகநாதன், பர்மா ராமு, அர்ஜுன் மனோஜ், உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.