கோவில்பட்டி: கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட
தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ அலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னிதியில் வைகாசி மாத சனி சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி காலை 8:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடினர். பூஜைகளை சுப்பிரமணிய சாமி, செல்வ சுப்பிரமணிய சாமி செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன். மற்றும் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.